கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களது வேண்டுகோள்.!

இலங்கையில் பூர்வீக மக்களாகிய நாம் இன்றளவும் சொந்த நாட்டுக்குள் அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்றோம்.
இதற்கான ஆதாரங்கள் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியன அல்ல எல்லோரும் அறிந்தவையே இப்படியான ஒரு கால கட்டத்தில் எமது சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கை அரசால் தொடர்ந்தும் அடக்கு முறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து வருகின்றன என்பதை சர்வதேசத்துக்கு உணர்த்தும் வகையில் இலங்கை அரசின் சுதந்திரநாளன்று பல்கலைக்கழகத்துக்கு முன்னால் பொதுமக்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி ஜனநாயக வழிப்போராட்டம் ஒன்றை கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளவுள்ளோம். 

No comments

Powered by Blogger.