சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டங்களை நாம் நிராகாிக்கிறோம்

சுதந்திர தினத்தை காிநாளாக காட்டுவது பிழை, சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டங்களை நாம் நிராகாிக்கிறோம்..
இலங்கையின் சுதந்திர தினத்தை காிநாளாக அனுட்டிப்பதை ஒத்துக்கொள்ள முடியாத என  கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், சுதந்திர தினத்தை எதிா்த்து வடக்கி ல் இடம்பெறும் போராட்டங்களை நிராகாிப்பதாகவும் கூறியுள்ளாா்.


இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமிழ் மக்கள் எதிர்ப்பினை வெளி ப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள அதேவேளை பல்கலைக்கழ கத்தின் இந்த அறிவிப்புக்கு இணங்க அனைவரும்

கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வர னும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, சுதந்திரதினத்தை துக்க நாளாக கொண்டாடி, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதாக கேப்பாபுலவு மக்கள் அறிவித்துள்ளனர்.

தமது வாழிடங்கள், வாழக்க்கையை அரசாங்கம் பறித்துக்கொண்டு, தமது நிலங்களில் இராணு வத்தினர் வாழ்க்கையில், தமக்கு அது எவ்வாறு சுதந்திரதினமாக இருக்கும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இந்த எதிர்ப்புக்கள் தொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேசிய உணர்வுகளை வைத்துக் கொண்டே இலக்குகளை

வெற்றி கொள்ள வேண்டும் எனவும் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.