யேர்மனியில் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் அச்சுறுத்தல்!

புலம்பெயர் நாடுகளான யேர்மனியில் ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்காவின் அச்சுறுத்தல் நேற்று யேர்மனி தலைநகரான பேர்லினில் இடம்பெற்றது.


சிறிலங்காவின் 71வது சுதந்திர தினம் . இது சிங்களத்திற்குரியதே தவிர  தமிழருக்கானதல்ல . உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாக 71 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் போராடி வரும் எமக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் வழங்காமல் தமிழ் மக்களை இரண்டாம் தரமக்களாக இன்றுவரை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் சிறிலங்கா அரசின் சுதந்திரதினத்தை   வலிகளுடனும் வேதனைகளுடனும் ஆறாத காயங்களுடனும் வாழும் ஈழத்தமிழராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

யேர்மன் தலைநகரத்தில் சிறிலங்கா தூதரகம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முகமாக நடாத்திய  களியாட்ட  சுதந்திரதின விழாவில் கலந்துகொள்ளும் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை  எடுத்துரைக்கும் முகமாக தமிழின உணர்வாளர்கள் கண்காட்சி நடாத்தியதை தடுக்கும்  முகமாக சிறிலங்கா தூதரகம் முழுமையாக ஈடுபட்டது. இருப்பினும் சட்டரீதியாக அனுமதிபெற்று சுதந்திரதின விழா நடைபெற்ற மண்டபத்திற்கு முன்பாக கண்காட்சி நடைபெற்றது.

தமிழின கண்காட்சியை பார்வையிட்ட வேற்றின மக்கள் தமது ஆதங்கத்தையும், இரக்கத்தையும் எம்மோடு பகிர்ந்துகொண்டனர்.அத்தோடு யேர்மன் மொழியில் "தமிழர்களின் கரிநாள்" எனும் துண்டுப்பிரசுரம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு   விளக்கமும் கொடுக்கப்பட்டது.

கண்காட்சி நிகழ்வு  முடிவடையும் நேரம் சிறிலங்கா தூதரகத்தின் அலுவலகர் தமிழ் செயற்பாட்டாளரை நெருங்கி அச்சுறுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற காரசாரமான வாக்குவாதத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்த்துறையினர்  ஈடுபட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.