EPRLFசிவசக்தி ஆனந்தனால் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை!

வன்னி மாவட்டத் தளபதி ஜெயம் அவர்களின் தந்தையார் பாலகுரு (பாவற்குளம் 4ம் யூனிற்)அவர்கள் ஓர் ஓய்வு பெற்ற அரச ஊழியர். இந்தியப் படையின் கொடூர காலத்தில் ஓய்வூதியப் பணம் எடுக்க வவுனியா வந்த வேளையில் EPRLF தேசவிரோதக் குழுக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். அன்று மாலை வீடு திரும்பாமையால் குடும்பத்தினர் உறவினர் ஊர்மக்களால் தேடப்பட்டும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சில நாட்கள் செல்ல வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக கட்டப்பட்டு மூடாமலிருந்த மலசலகூட கிடங்கில் இரண்டு பழுதடைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒருவர் ஜெயம் அவர்களின் தந்தையென்று இனங்காணப்பட்டது. அவருக்கு நீரிழிவு நோயினால் ஒரு கால் முழங்காலிற்கு கீழ் அகற்றப்பட்டிருந்தது. அதனால்தான் அந்த உடல் இனங்காணமுடிந்தது. இரு உடல்களும் போலீசாரின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவ்வேளை இரு உடல்களையும் தம்மிடம் ஒப்படைக்கும்படி EPRLF தேசவிரோதக் குழுக்களால் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர். அன்று இரவோடிரவாக சவச்சாலை யன்னலை உடைத்து தேசவிரோதக் குழு இரண்டு உடல்களையும் எடுத்துச் சென்று சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் வைத்து ரயர் போட்டு எரித்துவிட்டார்கள்.
பாலகுரு ஐயாவின் உடலோடு இருந்த மற்ற உடல், விடுதலைப் புலிகளின் ஆதரவாளரென EPRLFஆல் பிடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது என்று அடையாளம் காணப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.