மணல் கடத்தல் முறியடிப்பு: சாரதி தப்பியோட்டம் – ஒருவர் கைது!
யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் மணல் கடத்தல் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியவற்றை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மடக்கி பிடித்த நிலையில் சாரதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவால் இந்த மணல் கடத்தல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு முறியடிக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
‘யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை, பூம்புகார் பகுதியில் நள்ளிரவு வேளையில் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் அது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பூங்புகார் பகுதியில் நேற்று நள்ளிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை