டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

டுவிட்டரில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்காவிட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு இந்திய மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க, அந்த நிறுவனத்திற்கு மத்திய தொழில்நுட்ப மற்றும் சட்டத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், இதுவரை எந்த பதிவும் நீக்கப்படவில்லை என மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப சட்டத்தின்படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சில பதிவுகள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக உள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரம், டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து தாமதம் காட்டினால் தொழில்நுட்ப சட்டம் 69இன் படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இதன்போது அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.