தீவிரமடையும் தேர்தல் களம் – தமிழகத்தில் ராகுல்!

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் பிரசார பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று (புதன்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதற்கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மெரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில்  கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன்,   நண்பகல் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ரோயல் மெரிடியன் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பின்னர் சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் மாலை, 4 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி தலைமையில் இடம்பெறும் இந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்,  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.