கிளிநொச்சி மைதானம் கல்வெட்டுகளால் நிரப்படுமா?

2017.07.20 4 ஆம் திகதி மகிந்த சிந்தனையின் எதிர்கால  நோக்கு என்ற  எண்ணக் கருவில்  கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான மைதானம் அடிக்கல் நாட்டப்பட்டது.  என்றொரு கல்வெட்டு காணப்படுகிறது.


2019.03.17 ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் வழிகாட்டலில் கிளிநொச்சியில் நிர்மானிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாடோவினால் திறந்து வைக்கப்பட்டது.எனவும்  ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.

உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டுகள், நீச்சல், உள்ளக விளையாட்டரங்கு ஆகியவற்றை உள்ளடங்கிய மைதானம். இதில்  அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது நீச்சல் பயிற்சி தடாகம், உள்ளக விளையாட்டு விளையாட்டரங்கு இரண்டுமே.

உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டு என்பனவும் ஒவ்வொன்றாக அமைத்து திறக்கப்படும் போது ஒவ்வொரு  நினைவு கல்வெட்டுகள் எதிர்பார்க்கலாமா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.