பேஸ்புக்கில் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!!

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


நீர்தேகத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பு குறித்த இளைஞன் மேற்படி பாய்ந்த நீர்தேகத்திற்கு முன்பு நின்று செல்பி எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்தேகத்தில் பாய்ந்துள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த எம். கிலின்டன் எலஸ்ட் (வயது 24) என்று பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

திடீரென நீர்தேகத்தில் பாய்வதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இளைஞனின் சடலத்தினை கண்டெடுத்தனர்.

குறித்த இளைஞனின் சடலம் புலன் விசாரணையின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.