மசூத் அசாருக்கு தீவிரவாதத்துடன் தொடர்பில்லையென சீனா தொடர்ந்தும் வலியுறுத்து!

மசூத் அசாருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லையென சீனா தொடர்ச்சியாக  வலியுறுத்தி வருகின்றது.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கும் மசூத் அசாருக்கும் தொடர்பு இருப்பதைப் போன்ற ஓடியோ ஆதாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் இந்தியா அளித்துள்ளது. இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு இன்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் முடிவடைகின்றது.

இந்நிலையில், மசூத் அசாருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்திற்கும் தொடர்பில்லையென சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி குறிப்பிட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் கூறிவருகின்றது.

எவ்வாறெனினும், இந்தியா கையளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு வருகின்றது. மசூத் அசாருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த விடயத்தில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத சந்தர்ப்பத்தில், உறுப்பினர்களின் ஒருமித்த முடிவின் அடிப்படையில், ஐ.நா பாதுகாப்புச் சபை மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும். அவரது சொத்துக்கள் உடனடியாக முடக்கப்படும். அவர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும், ஆயுதங்கள் கிடைப்பதையும் அனைத்து நாடுகளும் உடனடியாக தடைவிதிக்க வேண்டும்.

இதேவேளை இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.