எகிப்தில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு!!

எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.


தாக்குதல் மேற்கொள்வதற்காக சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில்  இன்று (வியாழக்கிழமை) பொலிஸார் ஈடுபட்டனர்.

இதன்போது, வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.