திருநங்கை ராதா தேர்தல் களத்தில் பரப்புரையில்!!

“நாடாளுமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும். அதற்கு, என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று, தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.


சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் ராதா (50). திருநங்கையான இவர், தென்சென்னை லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு, ‘கணினி சுட்டி’ (கொம்பியூட்டர் மவுஸ்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக),ஜெயவர்தன்( அதிமுக), இசக்கி சுப்பையா(அமமுக), ரங்கராஜன்(மக்கள் நீதி மய்யம்), ஷெரின்(நாம் தமிழர் கட்சி)ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில் திருநங்கை ராதா, “நாடாளுமன்றத்தில் திருநங்கைகளின் குரலும் ஒலிக்கவேண்டும். அதற்கு, என்னை வெற்றிச்பெற செய்யுங்கள்” என்று, துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து திருநங்கை ராதா தெரிவிக்கையில்; “பெரும்பாலான மக்கள் எங்களைப் போன்றவர்களை, ஆபாசமான பெயர்களை வைத்து அழைத்து வந்தனர். ஆனால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எங்களை ‘திருநங்கை’ என்று என்றைக்கு அழைத்தாரோ, அன்று முதல் எங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது. அனைத்துத்துறைகளிலும் திருநங்கைகள் தடம்பதித்து வருகின்றனர்.

அதுபோல், நாடாளுமன்றத்திலும் திருநங்கைகள் இடம்பெறவேண்டும்; அங்கே எங்களுடைய குரல் ஒலிக்கவேண்டும். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். எம்.கொம் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் என்னை அன்போடு வரவேற்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 863 பேரில், ராதா மட்டுமே திருநங்கை வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.