தீராத நோய் தீர்க்கும் இருக்கன்குடி மாரியம்மன்!!

காஞ்சி காமாட்சி அம்மன்
அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். கமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

இருக்கன்குடி மாரியம்மன் 
 விருதுநகர் மாவட்டம்  இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சமயபுரம் மாரியம்மன்
திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, 'மகமாயி・என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

வெக்காளி அம்மன்
வெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில்  மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

வாராஹி அம்மன்
வாராஹி  அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலி மஞ்சள் மாலையை சமர்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி, முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றிகிட்டும்

துர்கை அம்மன்
துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள்.  ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.