பிரகீத் எக்னலிகொட விசாரணை நிறைவு!

ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.


இந்நிலையில் அதன் விசாரணை அறிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்கு இராணுவம் ஒத்துழைக்கவில்லை என்றும் இதனால் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன விடயத்தில் இராணுவம் புலனாய்வு பிரிவினர் தொடர்பு பட்டுள்ளார்களா என்பது தொடர்பான விபரங்கள் இந்த விசாரணை அறிக்கையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபல ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010, ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றார்.

இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற விசாரணையில், காணாமற் போனதற்கு முன்னர் எக்னலிகொட இராணுவ காவலில் இருந்தார் எனவும், முக்கிய சந்தேகநபர்கள் இராணுவ புலனாய்வாளர்கள் என்பதற்குமான குற்றச்சாட்டிற்கு இராணுவம் அதன் முழு ஆதரவை வழங்கவில்லை என்பதனால் விசாரணை முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.