ஐரோப்பாவின் செலவுமிகுந்த நாடாக ஐஸ்லாந்து !!


ஐரோப்பிய நாடுகளில் மிகவும் செலவுமிகுந்த நாடாக ஐஸ்லாந்து பெயரிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடுகையில் ஐஸ்லாந்தில் பொருட்களின் விலை 84 வீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐஸ்லாந்தில் பொருட்களின் விலையானது 2010 மற்றும் 2017 ஆண்டுக் காலப்பகுதியில் வியத்தகு வகையில் அதிகரித்துள்ளது. விலைகளின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. இந்த இடத்தை ஐஸ்லாந்து நோர்வே மற்றும் டென்மார்க்குடன் பகிர்ந்துக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் விலைகள் வெறும் 2 வீதமே அதிகமாகக் காணப்பட்டது.

No comments

Powered by Blogger.