கன்னியா விவகாரம் விசேட கலந்துரையாடல்!!

திருகோணமலை  கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம்  பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்று சர்ச்சை நிலைவியை அடுத்து இந்த விவகாரம் குறித்து இந்து கலாச்சார  அமைச்சராக உள்ள அமைச்சர் மனேகணேசன் தலைமையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.


தென்கைலை ஆதீனம் முன்னிலை வகிக்க  இந்து கலாச்சார அமைச்சர்  தலைமையில்  கன்னியா வெந்நீருற்று சைவத்தமிழ் மரபுரிமைகளை பாதுகாக்கும் கலந்தாய்வில்  குருமார்கள் , பணிப்பாளர், அறங்காவலர், சட்டத்தரணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், அமைப்பு சார் பிரதிநிதிகள் கலந்து மிகக் காத்திரமான அரசியல், சட்ட , நிர்வாக திணைக்கள ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இந்நிலையில் தகவிலினை பெற்ற அமைச்சர்   மனோகணேசன்  எதிர்வரும் வாரம் திருகோணமலைக்கு சென்று இதுகுறித்து கலந்துரையாடலை நடத்தவுள்ளேன் இதன் மூலம் தமிழ் இந்து மக்களுக்கு எதிரான இந்த அநீதியை  நிவர்த்தி செய்யவேண்டிய கடப்படாகும். இதன்மூலமே நாட்டில் உண்மையான தேசிய ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்ப முடியும். எல்லா மதங்களையும், எல்லா இனங்களையும் எல்லா மொழிகளையும் பிரதிநிதித்துப்படுத்தும் வரலாற்றினை எடுத்துக்காட்ட  வேண்டும் எவ்வளவு கஸ்டமான காரியங்களானாலும் கூட இவற்றை செய்ய எனது அமைச்சு அமைச்சர் என்ற ரீதியில் நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.