யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய தீர்த்தத் திருவிழா !!📷

யேர்மனியில் சிறப்புமிக்க ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய 10ஆம் திருவிழா இ்ன்று தீர்த்தத் திருவிழா  வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஐந்தொழில்களில் படைத்தல், காத்தல்,அழித்தல் என்று முறையே நல்கிய எம் தாயானவள் அம்பாளின் அருளை நல்கிய நாள் இதுவாம்.


நீர் நிலைகளில் மிகச் சிறந்தது சமுத்திரமாகும். பொன் பதியின் புண்ணிய தீர்த்தமாக விளங்குவது அம்பாளின் திருவடிகள் பதிந்த தீர்த்த கரை ஆகிய திருவடிநிலை தீர்த்தவாரி ஆகும். ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் அருள் பாலித்த எம் பிராட்டி அம்பாள் நீர்நிலைகளில் இருக்கின்ற உயிரினங்களுக்கும் தனது அருளை வழங்க சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெற்றது. மக்களுக்கும், உயிரினங்களுக்கும் தனது அருளால் தொழிலைச் செல்வதே தீர்த்தமாகும். யேர்மனியில் இவ் தேசத்தில் இக்காலங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுவது மிக சிறந்த வரப்பிரதாசம் ஆகும்.ஆலயத்தில் கல்வி வளர்ச்சி க்கு சமயம் சார்ந்த சமய போட்டி பரீட்சைக்கு 3ம் திருவிழா கால பகுதியில் நடத்தியது. இன்று அவ் சமய போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற கீழ் பிரிவு,மத்திய பிரிவு,மேல் பிரிவு போன்ற வெற்றியாளருக்கு பாரிசில் வழங்கினர். இதனை திரு. தெய்வேந்திரன் குடும்பத்தினர் நெறிப்படுத்தினர். மாலை கொடிக்கம்பம் திரைச்சீலை இறக்கப்பட்டு அம்பாள் வீதி உலா அருள் காட்சியளித்தார்.நிறைந்த பக்த்தர்கள் சிபாச்சாரிய குழுக்களிடம் ஆசியைப் பெற்றனர்.ஆலய நிர்வாகம் பொன்னாடை கொளரவிப்பு நிகழ்வுடன் நன்றி உரையுடன் நிறைவுற்றது.
Powered by Blogger.