முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு வேண்டுகோள்!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 அடி 3 அங்குலம் உயரமும் 50 வயது மதிக்கத்தக்க இந்த முதியவர் சாரம் அணிந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதியவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021222 2222, அல்லது 0213211258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அநாதரவான நிலையில் கடந்த திங்கட்கிழமை குறித்த முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.