"ராஜபக்ச குடும்ப அரசியல் சூத்திரம்"

முன்னர் ஜனாதிபதி - மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் - கோத்தாபாய மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி - கோத்தாபாய பாதுகாப்பு செயலாளர் - மகிந்த ராஜபக்ச

MR - Mahinda Rajapakse GR - Gottapaya Rajapakse BR - Basil Rajapakse NR - Namal Rajapakse ராஜபக்ச குடும்ப அரசியலில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபாய ராஜபக்ச ஆளுமையான அரசியல்வாதிகள் என்பதையும் மறுக்க முடியாது. ஆளுமை என்பதை பல வழிகளில் நோக்கப்படும். அவை தொடர்பில் பிறிதொரு பதிவில் விபரமாக பார்போம். இப்போது இந்த பதிவின் விடயத்திற்கு வருவோம். "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -SLPP ஜனாதிபதி வேட்பளாராக கோத்தாபாய ராஜபக்ச அவர்களை மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்மாக அறிவித்தார்" "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்மாக பொறுப்பேற்றார்"
இதில் ஆச்சியப்பட என்ன இருகின்றது? "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன" என்பதே ராஜபக்சக்களின் குடும்ப அரசியலின் வாசல்தலம் தான் என்பதை மக்கள் அறியாதவர்களா? ஒருவேளை மகிந்த ராஜபக்ச அவர்கள் பொதுஜன பெரமுக கட்சியின் தலைவர் எனும் நிலையை அறிவிக்காது விட்டிருந்தால் தான் அதிசயம். அதே நேரம் ராஜபக்ச குடும்ப அரசியல் பசிக்கு நாட்டை வித்திட கோத்தாபாய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காது விட்டிருந்தால் தான் அதிசயிக்க வைத்திருக்கும். அந்த வகையில் மகிந்தவின் ஆட்சி அதிகார மோகம் நீங்கி விட்டதாக கருத்த முடியாது. ஆட்சி அதிகார மோகத்தில் அவர் பல முறை மண் கவ்வினார். MR - Mahinda Rajapakse GR - Gottapaya Rajapakse BR - Basil Rajapakse NR - Namal Rajapakse இது தான் அந்த குடும்ப அரசியல் சூத்திரம். இது மன்னார் ஆட்சிக்கு சமமான குடும்ப ஆட்சி சூத்திரம் ஆகும். கடந்த காலங்களில் 2015 இற்கு முன்னர் ஒரு தசாப்பத்தை முழுமையாக ஆட்சி செய்த இந்த ராஜபக்ச குடும்ப ஆட்சி 2015 இல் சிறுபான்மை இன மக்களின் பாரிய பங்களிப்புடன் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகளின் தவறான ஒரு முடிவே 2004 தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகி ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு அடித்தளம் இட்டது. (இங்கு தவறான முடிவு எனக் கூறியது யாரும் உணர்ச்சி வசப்ட வேண்டாம். அது எந்த வகையில் என்பது தொடர்பில் பிறிதொரு பதிவில் விபரமாக பார்போம்)
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆகியமைக்கு காரணமாக அமைந்த விடுதலை புலிகளை பண்ணாட்டு அரசியல் வல்லூறுகளின் ஆதரவுடன் அழித்தது மட்டுமல்லாது தமிழ் மக்களையும் பாரிய இனப்படுகொலை செய்தது இந்த ராஜபக்ச குடும்பம். அதற்காக ராஜபக்ச குடும்பம் மட்டுமே இன படுகொலைக்கு காரணம் எனக் கூற முடியாது. இனப்படுகொலையின் ஆரம்ப அடித்தளத்தில் ரணில் அவர்களும் முக்கிய பங்கு வகித்தவர். இந்த குடும்ப அரசியல் சூத்திரத்தினை சாத்தியம் ஆக்குவதற்கு ராஜபக்ச குடும்பம் இனி வரும் ஒரு சில மாதங்களுக்கு தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு பண பலத்தை மிகவும் மோசமாக பிரயோகிக்கும் என்பதில் ஐயமில்லை. எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் பணத்திற்காக வாக்குப் போட மாட்டார்கள். உயிர் போகினும் உணர்வுள்ள தமிழர்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு வாக்கு போட மாட்டார்கள் என்பதை ராஜபக்ச குடும்பம் அறியாமலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தமிழ்த் தேசப் கூட்டமைப்பும் ராஜபக்ச குடும்பத்திற்கும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கும் ஒரு போதும் ஆதரவு வழங்காது என்பதில் சந்தேகமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இதர தமிழ் அரசியல் கட்சிகள் ராஜபக்ச குடும்பத்திற்கும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கும் ஆதரவு வழங்க கூடாது என்பதற்கு சில காரணங்கள் உண்டு. 1. ராஜபக்ச குடும்ப ஆட்சி வந்தாலும் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அத்தோடு பேரினவாத எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சினைக்கு உள்ளக இணக்கப்பாட்டில் தீர்வு வழங்கப்போவது கிடையாது. 2. ராஜபக்ச குடும்ப ஆட்சி என்பது தேசிய இனப் பிரச்சினை என்பதை தாண்டி ஒட்டு மொத்த நாட்டையும் மன்னர் ஆட்சிக்கு ஒப்படைப்பதாக அமையும். 3. முள்ளிவாய்கால் பேரவல இன அழிப்பை அழிப்பை மேற்கொண்ட ராஜபக்ச குடும்பத்திற்கு தமிழர் தாமே சர்வதேச அங்கீகாரம் வழங்க ஆதரவு கொடுத்து இன அழிப்பு எனும் விடயத்தில் ராஜபக்ச குடும்பம் தப்பிக்க உதவியதாக அமையும். ஆகவே மீளவும் ராஜபக்ச குடும்பம் ஆட்சிகு வர துடிக்கும் நிலையில் ஒரு வேலை முஸ்லிம்கள் அரசியல் தலமை சோரம் போகலாம். போனாலும் ஆச்சியப்பட வேண்டியது இல்லை. தமிழர் தரப்பு சோரம் போகக் கூடாது என்பதே நிதர்சனம். அதே வேளையில் UNP கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசா அவர்களை நியமித்தால் சஜித் அவர்களுக்கு தமிழர் ஆதரவு வழங்கினால் இந்திய இராணுவ பிரசன்னம் முதல் பல வழிகளிலும் தமிழர் இன அழிப்பை மேற்கொண்டவர் ஆகிய முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா அவர்களின் இன அழிப்பு எனும் விடயத்தில் பிரேமதாசா அவர்களின் மகன் ஆகிய சஜித் பிரேமதாசா அவர்களை அங்கீகரித்து பிரேமதாசாவின் தமிழ் இனப் படுகொலை இரத்தக் கறைகளுக்கு வெள்ளை அடிப்பதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் தனது அரசியல் சிம்மாசனத்தில் தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் மண் கவ்வுதல் உறுதி என்பதை அறிந்து இன்னொரு வேட்பாளரை தேடுகின்றார். அது யார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். -த.கிருஷ்ணா- பி.கு: இந்த பதிவை எழுதும் போது ஏதோ பின்னால் வெள்ளை வான் சத்தம் கேட்குற மாதிரி ஒரு ஃபீலிங். அட போங்கடா முதல் ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வரனுமே.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.