தலைவர் பிரபாகரன் நற்புகழ் கொண்டவர் என்ற ரீதியில்சுமந்திரன் கருத்துரைக்கவில்லை!!

வல்வெட்டிதுறையில் இடம்பெற்ற ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாக திறப்பு விழாவில் உரையாற்றிய நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் உலக சாதனையாளர்கள் பலர் வல்லை மண்ணில்.இருந்தே உருவாகியவர்கள் அவர்கள் வரிசையில் முதலாமவரின் ஆனந்தனின் சாதனைகள் பல பதியப்பட்டு உள்ளது இரண்டாமவரின் சாதனைகள் பல படங்களாகவும் இன்னபிற வடிவங்களாகவும் பதியப்பட்டுள்ளது இதேவேளை மண்ணிலிருந்து மூன்றாவது ஓர் உலக சாதனையாளனை உருவாக்கிட வைத்திடாதீர்கள். என்று தெரிவித்து இருந்தார் நல்ல விடயம் ஆனால் இதில் தலைவர் பிரபாகரனின் பெருமைகளும் அவருடைய நற்புகழும் எவ்விடத்தில் கௌர சுமந்திரன் அவர்களால் பதியப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகின்றது. கடந்த கால ஒரு அனுபவத்தின் அடிப்படையில் என்னிலும் எழுகின்ற அச் சந்தேகம் சரியென்றே எனக்கும் தோன்றுகின்றது. ஏன்எனில்

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் ஒரு அரசியல் கருத்தரங்கு அப்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவநாதன் சேர் தலைமையில் இடம் பெற்றது . ஆயுதப்போராட்டத்தை மட்டுமே யாசித்தவனாக அதை மட்டுமே தெரிந்தவனாக அரசியல் அறிவு அறவே இல்லாதவனக நானும் ஒரு பார்வையாளனாக அதில் கலந்து கொண்டிருந்தேன். அதில் பல பேச்சாளர்கள் அதில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்களும் ஒரு பேச்சாளர். சுமந்திரன் என்றால் யார் என்றே அன்று எனக்கு தெரியாது. அவரை முதல் முதலாக அன்று தான் பார்த்தேன் அதுவும் மேடையில்.

கௌரவ சுமந்திரன் அவர்களுக்கான சந்தர்ப்பத்தில் அவரும் தனது உரையை தொடங்கினார். ஒரு சட்டத்தரணிக்கே உரித்தான் மிடுக்கோடு தனது உரையை தொடந்தார். நல்லாகத்தான் உரையாற்றினார் அதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார் இந்த மண்ணிலே இடம் பெற்ற போராட்டம் ஒரு அதர்மம் நிறைந்த போராட்டம். அது அதர்மம் நிறைந்த போராட்டம் என்ற காரணத்தினால் தான் அது தோற்றுப்போனது என்ற ரீதியில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

பல ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகத்தாலும் உதிரத்தாலும் தற்கொடையாலும் உருவாக்கப்பட்ட இந்த உன்னதமான ஒரு விடுதலைப்போராட்டத்தை அதர்மம் நிறைந்த போராட்டம் என்ற ரீதியிலான அவரது பேச்சு ஏற்புடையதாக எனக்குத் தெரியவில்லை. சுமந்திரன் அவர்களின் பெயரை கேள்விப்பட்ட நாள் அன்றே அவரைப் பார்த்த நாள் என்றே அவரை வெறுக்கவும் செய்தேன்.

காலங்கள் பல உருண்டன பல செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. அதில் முக்கியமானது

நாம் விடுதலைப்புலிகள் மீதோ அல்லது அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல. நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கின்றோம் நாம். தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை என்று கொழும்பு ஆங்கில வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் வடபுலத்தில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட இன சுத்திகரிப்பு என்கின்ற கொடிய குற்றச் செயலை எண்ணி தான் வெட்கித் தலைகுனிகின்றேன் என்றார்.

அக ஒரு விடுதலைப்போராட்டத்தினை அதர்மம் நிறைந்த போராட்டம் அதனால் தான் அது தோற்றது என்ற கோணத்திலும். விடுதலைப்புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி இல்லை என்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ ஊக்கிவிக்கவோ இல்லை என்றும் புலிகளின் இன சுத்திகரிப்பு என்ற கொடிய குற்றச் செயலைப் புரிந்தனர் என்று கூறியும் அதற்காக வெட்கி தலைகுனிந்து கொண்டு எவ்வாறு தலைவர் பிரபாகரன் ஒரு நற்புகழ் கொண்டவர் என்ற ரீதியில் அவர்கள் கருத்து தெரிவித்திருக்க முடியும் ஆக அவர் தலைவர் பிரபாகரன் நற்புகழ் கொண்டவர் என்ற ரீதியில் அவர் கருத்துரைக்கவில்லை என்பது தெளிவு.

ஆக விடுதலைப்புலிகள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் மேற்கூறிய கருத்துக்களை தன்னிடத்தே கொண்டிருக்கின்ற வெளிப்படையாக கூறுகின்ற கௌரவ சுமந்திரன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உலக சாதனையாளன் என்று அவரை விபரித்தது அவருடைய எந்தச் செயலுக்காக என்ற கேள்விக்கான பதிலையும் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

No comments

Powered by Blogger.