வடமராட்சிகிழக்கு வத்திராயன் கடலில் கடற்படையினரால் மீனவர்கள் மீது தாக்குதல் படகு சேதம்!!

நேற்று 12.08.2019 மீன்பிடித்தொழிக்கு வடமராட்சிகிழக்கு வத்திராயனில் இருந்து கணபதிப்பிள்ளை
சிவச்சந்திரன் (மயூரன்) என்பவருக்கு சொந்தமான படகில் ஜெயபாலு ஜெயநேசன்(நேசன்)என்பவரும் செளந்தராசா செல்வக்குமார்(செல்வன்) என்பவரும் பறவைவலைத்தொழிலுக்கு போய் கரை நோக்கி திரும்பி வரும்போது இரவு 10.50 மணிக்கு கரையிலிருந்து 2கடல் மைல்தூரத்தில் கடற்படை வழிமறித்து தமது படகுடன் அனைத்து மீன்பிடி படகில் இறங்கி செக்பண்ணிவிட்டு (பரீசோதித்துவிட்டு) அவர்களிடம் தமக்கு கறிக்கு சூரை மீன் வாங்கிவிட்டு அவர்களுக்கு மகிநூடில்ஸ் 3 பைக்கற் கொடுத்துவிட்டு கடற்படைபடகாண டோறாவை திருப்பி நேரேக மீன்பிடிப்படகுமீது மோதிவிட்டு சென்றனர் என்றும் தமது படகு கடலில் மூழ்குவதாகவும் சத்தமிட்டு தம்மைகாப்பாற்றுமாறும் கத்தியும் அவர்கள் அப்படியே விட்டிட்டுசென்றுவிட்டார்களாம் தாம் உடனடியாக சம்மவம்பற்றி கரைக்கு தொலைபேசிமூலம் அறிவித்துவிட்டு போட்தாள்வதாகவும் உடனடியாக கரையிலிருந்து போட்கொண்டுவரும்படியும் சொல்லிவிட்டு தண்ணீர் ஏற ஏற தாம் கரையைநோக்கி ஓடிவந்ததாகவும் கரையிலிருந்து போட்வரமுதல் தாம் கரையை அடைந்துவிட்டதாகவும் தாம் 20 பாகம் அண்ணளவாக கரையிலிருந்து 10கடல் மைல்களில் தொழில்செய்டாகவும் அங்கு இந்த சம்பவம் நடந்திருந்தால் தாம் இருவரும் போட்டுடன் கடலில் மூழ்கிசாவடைந்துதான் இரஜப்பம் என்றும் தெரிவித்தனர் கடற்படையினர் மதுபோதையில் இருந்தனர் என்றும் தெரிவித்தனர் இந்த சம்பவம் தொடர்பாக தாம் கிராமசேவகர் பிரதேசசெயலர் கடல்தொழிலாளர் சங்கம் சமாசம் நீரியல்வளத்துறைதிணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளதாகவும் பொலீசில் முறைப்பாடுசெய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.