நான் மட்டுமல்ல..!!

நான் மட்டுமல்ல நாங்கள் யாவரும் உங்கள் பிள்ளைகளுக்கு விசுக்கோத்து தீர்த்தியவர்களே


நான் மட்டுமல்ல
நாங்கள் யாவருமே தீர்ப்பை வைத்துத்தான்
உங்களை ஈர்க்கிறோம்

நான் மட்டுமல்லை
நாங்கள் யாவரும் புத்தரை உங்கள்
உதிரத்தால் குளிப்பாட்டும் உத்தமிகள்

நான் மட்டுமல்ல
நாங்கள் யாவரும் அமெரிக்கா போன்ற இன்னபிற நாடுகளின் தரகர்கள்

நான் மட்டுமல்ல
நாங்கள் யாவரும் போர்க்குற்ற கயிற்றில் தொங்க அச்சங் கொள்கிறோம்

நான் மட்டுமல்ல
நாங்கள் யாவரும் அரசியலில் தோற்றால்
சிங்களனே எம்மைக் கொல்வான்

நான் மட்டுமல்ல
நாங்கள் யாவரும் சனாதிபதியாக ஆசைப் படுகிறோம்

எனவே என்னை மட்டுமல்ல
எங்களை சனாதிபதி ஆக்கணும் இல்லாட்டி
விசுக்கோத்து தீத்தி சுட்டிடுவோம்

அறுதியும் இறுதியுமாய் ஒன்றைக் கூறுகிறேன் சஜித்தும் எமது நண்பரே

No comments

Powered by Blogger.