யாழ் தூதரகத்தில் இந்தியாவின்73 ஆவது சுதந்திர தின நிகழ்வு!!📷

இந்தியாவின்73 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று [ 15.08.2019 ] காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மருதடி ஒழுங்கையில் அமைந்துள்ள யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் s..பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
மிகவும் எளிமையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்திய தேசியக் கொடியினை யாழ்.இந்திய துணைத் தூதுவர் எஸ் .பாலச்சந்திரன் ஏற்றிவைத்தார். கொடிக்கீதம் இசைக்கப் பட்டமையினைத் தொடர்ந்து இந்திய நாட்டின் ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப் பட்ட சுதந்திர தின வாழ்த்து அறிக்கையும் வாசிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது . யாழ்.தர்மினி பத்மநாதன்

No comments

Powered by Blogger.