கள்ளக்காதலை கணவர் பிரித்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மனைவி!!

தகாத உறவை கணவன் பிரித்ததால், இளம் பெண் ஒருவர் கள்ளக்காதலனோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது உறவுக்காரர் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், கல் உடைக்கும் தொழில் செய்து வரும் இவர் சுரேஷின் வீட்டிற்கு அய்யப்பன் அடிக்கடி வந்து சென்றதால் அகிலா உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் தகாத உறவாக மாறியது.
Image result for suicide india
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்ததால் கணவனை விட்டு வரவும் தயங்காத அகிலா தனது ஆசைக்காதலனுடன் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து கடந்த மே மாதம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.
Image result for suicide india
இதுபற்றி கணவர் சுரேஷ் அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அகிலாவை தேடி வந்தனர். இந்நிலையில் வெளியூரில் தங்கி இருந்த அய்யப்பன், அகிலா இருவரும் நேற்று இரவு விளாரிப்பட்டு அடுத்த கோவிலூர் ஏரிக்கு வந்து சேர்ந்தனர் அப்போது போலீசார் தேடும் தகவலை அறிந்த அவர்கள், அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து கூல்ட்ரிங்ஸில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை ஏரிக்கு சென்றவர்கள் அய்யப்பன், அகிலா பிணமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Powered by Blogger.