சின்ன பிரச்சனையால் சொந்த தம்பியை வெட்டி கொன்ற சொந்த அண்ணன்!!

கூட பிறந்த அண்ணனே தனது சொந்த தம்பியை ஏமாற்றி அழைத்துச்சென்று கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் அயன்குஞ்சரத்தில் வசித்து வருபவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. கூலிவேலை செய்து வருகிறார். இவர்களது மூத்த மகன் சரத்குமார் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். 2-வது மகன் சிவக்குமார் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் காப்புக்காட்டில் கழுத்து அறுபட்து கொடூரமான முறையில் நிலையில் பிணமாக கிடந்தான் சிவக்குமார். அவனுடைய சடலத்துக்கு கொஞ்ச தூரத்தில் ஆணுறைகள் சிதறி கிடந்தன. அதனால் பாலியல் ரீதியாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த சமயத்தில் சிவக்குமார் பார்த்துவிட்டு இருக்கலாம் என்றும் வெளியில் சொல்லிவிடக்கூடாது என்பதால் அவனை கொன்றிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குப் பின் சிவக்குமாரின் கூட பிறந்த அண்ணன் சரத்குமார்தான் தம்பியை கொன்றது என்று தெரியவந்துள்ளது.
Image result for murder india
இந்த கொலையை கண்டுபிடிக்க உதவியது மோப்ப நாய் ராக்கி தான் என்பது தெரிந்துள்ளது. நேராக ஓடிப்போய் சிவக்குமார் வீட்டில் நின்று விட்டது. அதன் பிறகு தான் சிவக்குமாரின் அம்மா பராசக்தி, அண்ணன் சரத்குமார், பாட்டி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. வீட்டிற்குள்ளேயே ஒரு கத்தியும் கிடைத்தது. பிறகு போலீசார் ரகசியமாக இவர்கள் எல்லாரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
Related image
சரத்குமார் மீது மட்டும் சந்தேகம் அதிகமானது. இதனையடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில்,எனக்கும் என் தம்பிக்கும் வீட்டில் அடிக்கடி சண்டை வரும். சம்பவத்தன்றும் அப்படித்தான் சண்டை வந்தது. அதனால அவனை கொல்ல முடிவு பண்ணேன். சிவக்குமாருக்கு முயல் வேட்டை ரொம்ப பிடிக்கும். வழக்கமாக அவன் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டைக்கு போய்டுவான். இதை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன்
அப்போது நானே அவனை முயல்வேட்டைக்கு போலாம்னு கூட்டிட்டு போனேன். பின் புதர் மண்டி கிடக்கும் பாறை இடுக்கு இடையே சிவக்குமாரை முயலை பிடிக்க கண்ணி வைக்குமாறு சொன்னேன். அவனும் கீழே இறங்கி கண்ணி வெச்சான். அப்போதான் நான் பட்டாக்கத்தியால் சிவக்குமாரை வெறித்தனமாக வெட்டினேன். துடிதுடித்த அவன் அங்கேயே விழுந்து செத்துட்டான். நானும் வீட்டுக்கு வந்துட்டேன் என கூறியுள்ளான்

No comments

Powered by Blogger.