கோத்தபாய ராஜபக்சவை உலகறியும் நாள் நவம்பர் 17 2019.!

சிறீலங்கா “சனநாயக” “சோசலிச” “குடியரசின்” புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவை உலகறியும் நாள் நவம்பர் 17 2019.


எப்பொழுதெல்லாம் சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் சிங்கள சமூகம் கூட்டக இணைந்து பலமிக்க “அரசர்” ஒருவரை ஜனாதிபதியாக்கிவிடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றாற்போல் இத்தீவின் சிறுபான்மை சமூகங்களை வடிவமைத்துக்கொள்கின்றனர். கடந்து வரும் நல்லாட்சி காலத்தில், முன்னாட்சி காலத்தின் விளைவாக இத்தீவு மீளமுடியாத ஆக்கிரமிப்பை சந்தித்திருப்பினும் அது குறித்தெல்லாம் சிங்கள சமூகம் அக்கறைகொள்ளவில்லை. சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் எனப் பலமிக்க நாடுகள் அனைத்துமே இலங்கையை மேய்ந்துமுடித்துவிட்டன. மீளவே முடியாத கடன் வலைக்குள் சிறீலங்கா சிக்கவைக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியில் சின்னாபின்னமாகியிருக்கிறது. இது குறித்தெல்லாம் சிங்கள சமூகம் கரிசனை கொள்ளவில்லை.

அவர்கள் அனைவரும் அச்சப்படும் ஒரே விடயம் இஸ்லாமிய பயங்கரவாதம். அது உண்டோ இல்லையோ என்பதெல்லாம் அப்பாற்பட்ட விடயம். அப்படி உருவாக்கப்பட்டிருக்கும் பயத்தை நீக்குவதற்கு சிங்கள மக்களுக்குப் பொருத்தமானதொரு ஜனாதிபதியை எதிர்பார்க்கின்றனர். தற்போதைய பிரதமரின் விருப்பமும் அதுவேதான். அதற்கான காய்நகர்த்தலைத்தான், தமது தரப்பிலிருந்து வாக்குப் பலமிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தலையெடுக்காதவாறு பார்த்துக்கொள்ளுவதனூடாக மேற்கொள்கின்றார்.

எனவே சிறீலங்கா “சனநாயக” “சோசலிச” “குடியரசின்” புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவை உலகறியும் நாள் நவம்பர் 17 2019.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.