இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

இக்கட்டுரைத் தொடரை எழுதும்பொழுது  உணர்ந்த ஒரு ஆச்சரியமான விடயம்  என்னவென்றால் இன்று நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உத்திகள் பெரும்பாலும்    புலிகளின் உத்திகளுக்குள்ளே மறைந்திருக்கின்றன என்பதுதான். இது ஏனென்றால் புலிகளின் உத்திகள் என்பது அடிப்படையில் சிக்கலமைப்பிற்கான (complex systems) உத்திகள் .  இதைவிட சிறந்த உத்திகள் இன்றைய உலகில் வேறு இல்லை என்றே சிக்கலமைப்பிற்கான ஆராய்ச்சிகள் கூறுகின்றன[8.9]. புலிகள் இவ்வுத்திகளை போரில் பயன்படுத்தினார்கள்; நாம் அதை மாற்றி போரற்ற இன்றைய சூழலில் பயன்படுத்த வேண்டும். அது மட்டும்தான் வித்தியாசம். இனி சிக்கலமைப்பு உத்திகளை எவ்வாறு இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தலாம் என சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒரு சமூகம் பேரிடரை சந்தித்தபின் அதிலிருந்து கற்று தன்னை மறுசீரமைத்து முன்பைவிட பலமடங்கு பலம்பெற வாய்ப்பு ஏற்படுகிறது சமூகங்கள் இவ்வாறான வலுகூட்டலை வரலாற்றுக் கற்பிதங்களின் (naarative) வழியாகவே மேற்கொள்கிறது. உதாரணமாக சப்பானியர்கள், யூதர்கள், மேற்குலகம் பலம்வாய்ந்த நாடுகளாக இவ்வாறுதான் மாறியது. தமிழ்ச்சமூகமும் அவ்வாறு முன்பைவிட பலம்வாய்ந்த தேசமாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அவ்வாறான மறுசீரமைப்புக்குத் தேவையான பலம் வாய்ந்த,  முன்னேற்றகரமான, யாருக்குமே கிடைக்காத கற்பிதங்களை (narrative) புலிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதுதான் அவர்களின் மாபெரும் கொடை. அவ்வாறான மறுசீரமைப்பை நோக்கி செயல்படுவது முதன்மையான செயல்பாடாக  இருக்கவேண்டும் [1].
நமது வெற்றி என்பது நாம் எதிர்நோக்கும் சூழலுக்கு ஏற்ப கற்று, பல்வேறு சிக்கலான அமைப்புகளை உருவாக்கி,  அவற்றை இணைத்து இயக்கி,  வாய்ப்புக்களைப் பெருக்குவதை நம்பியே உள்ளது. அவ்வாறு இல்லாமல் நாம் ஒரே  ஒரு உத்தியைத் தேடிக்கொண்டிருந்தால்,  அது சிங்களத்தின்   செயசிக்குறு நடவடிக்கை போன்று படுதோல்வியில் முடியும். நமது சிக்கல்தன்மையை கூட்டுவதை மையமாக வைத்தே நமது செய்லபாடுகள் இருக்கவேண்டும். அதற்கு ஒரு உத்தி என்றில்லாமல், பல்வேறுபட்ட உத்திகளைக் கையாளவேண்டும் [3].
சமூகத்தை பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படும் ஒரு எந்திரமாகப் பார்க்கவேண்டும். நமது இலக்கை அடைய எதுபோன்ற எந்திரங்கள் தேவையோ, அதை உருவாக்குவதுதான் நமது கடமை. மக்களையோ அல்லது ஒரு தலைவரையோ பிழை சொல்லிக் கொண்டிருந்தால், முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. நீண்டகால அரசியல் அனைத்தும் அமைப்பு ரீதியானவை என்பதை நாம் முதலில் அறியவேண்டும். (All long term politics are institutional) [10].
அவ்வாறான சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதற்கு பலமான ஒத்துழைப்பான பண்பாடு தேவை. இன்றைய நண்டுப் பண்பாட்டை  வைத்து நம்மால் எந்த ஒரு உருப்படியான அமைப்பையும் உருவாக்க முடியாது. இதற்கானத் தீர்வை புலிகள் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார்கள். அதுதான் அதியுயர் ஒத்துழைப்பான புலிப்பண்பாடு. இன்றைய பொதுச்சமூகத்திற்கு ஏற்றவாறு புலிப்பண்பாட்டை மாற்றி மக்களை அதியுயர் ஒத்துழைப்பான சமூகமாக மாற்றவேண்டும். இதை  மறுசீரமைப்பின் ஒரு முக்கிய பாகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் [4].
சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதற்கு அறிவு (knowledge) அடிப்படையானது. நமக்கு எப்பொழுதும் முழுமையான அறிவு இருக்கப்போவதில்லை. அதனால் நாம் தொடர்ந்து சோதனை செய்து கற்று அறிவை வளர்த்துக்கொண்டு செல்லவேண்டும். அதற்கேற்ற ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்கவேண்டும். நவீன உலகத்தின் பரிணமாத் தத்துவம் என்பது “அறிவுடையது வெல்லும்”. புலிகள் அறிவில் எதிரிகளைவிட முன்னோடிகளாக இருந்ததால்தான் வெற்றி பெற முடிந்தது [2, 5].
வித்தியாசமான, புதிரான, நம்பமுடியாத, துணிவான கருத்துக்களுக்கும் திட்டங்களுக்கும் செவி மடுக்கவேண்டும். வரலாற்றில் அதுபோன்றவைதான் மனித குலத்தை  முன்னுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. புலிகள்  ஆரம்பித்த பொழுது “சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது”  என்றுதான் கிண்டலடிக்கப் பட்டார்கள். முடிவில் அவர்கள் சாதித்ததை  நவீன தெற்காசிய வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்கவில்லை. பழைய அலுத்துப்போன வேலை செய்யாத உத்திகளில் ஆற்றலை வீணடிக்கக்கூடாது. இருப்பதிலேயே மோசமான  தவறு என்பது நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே செல்வதுதான்.
அமைப்புகளை கீழிருந்து மேலாக சூழலுக்கேற்ப அடுக்கடுக்காக சிக்கனத்துடன் பரிணமிக்க வேண்டும்.  சிக்கலான அமைப்புகளை மேலிருந்து கீழாக திட்டமிட்டு கட்டமுடியாது. புலிகளின் பலம் ஒரு புலிவீரனின் நெஞ்சுரத்திலிருந்து பிறக்கிறது. அவ்வாறு பலமான உறுப்பினர்களை வைத்து, படிப்படியாக கீழிருந்து பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அடுக்கடுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் சிக்கனமாக தேவைக்கேற்ப இயங்கி இயக்கத்தின் மொத்த வாய்ப்புகளை  பெருக்கும்படி  உருவாக்கப்படவேண்டும். புலிகள் கீழிருந்து மேலாக கட்டப்பட்டவர்கள். எதிரிகள் மேலிருந்து கீழாக கட்டப்பட்டவர்கள். புலிகளின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் [5].
அமைப்புகளை பரிணமிப்பதில் அமைப்புகளுக்கிடையே   போட்டிகளை உருவாக்கவேண்டும். அவற்றில் சிறந்த அமைப்புகள் பரிணாமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரிதாக வளரும். ஒரு அமைப்பு அழிந்தாலும் இன்னொரு அமைப்பு அவ்விடத்தை நிரப்பும். ஒரே ஒரு அமைப்பு என்று செயல்பட்டால் அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம். நமது உடலில் பல பாகங்கள் இரட்டிப்பாக இருப்பது இதனால்தான். பரிணாமம் இயற்கையிலே திடத்தன்மையை  உருவாக்கும். புலிகள் ஒரு பரிணாம இயக்கமாக இருந்ததால்தான் பலமுடன் இருந்தார்கள்.    ஆரம்பத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கிடையேயான போட்டியே   புலிகளை செதுக்கி பெரிய இயக்கமாக வளர்த்தது. ஒரு நாட்டுக்கு ஒரு இராணவம்தான் இருக்கமுடியும் என்பதால்தான் ஆயுதப்போராட்டம் முடிவில் ஒரு அமைப்பாக பரிணமித்தது [2].
இலக்கை 100%  உறுதியாக அடைவதற்கான உத்திகளை யாராலும் வகுக்க முடியாது.  அதனால்   இலக்கை நாம் நம்பிக்கையுடன்  தான் அணுகமுடியும்.  நம்மால் முடிந்தவரை பகுத்தறிந்து, அனைத்து அறிவையும் உள்ளடக்கி திட்டமிடவேண்டும். அதே நேரம் மாறும் சூழலுக்கே ஏற்ப தொடர்ந்து கற்று உத்திகளை சீர்படுத்திக்கொண்டே  இருக்கவேண்டும். நம்பிக்கை என்பது இலக்கை அடைவதற்கான மன உறுதியை அளிக்கும். பகுத்தறிந்த செயல்பாடுகள் இலக்கை  அடைவதற்கான வழிகளை உருவாக்கும். புலிகள் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பகுத்தறிந்த செயல்பாடுகளையும் இணைத்து செயல்பட்டதனால்தான் பல வெற்றிகளைப்  பெறமுடிந்தது [6].
இன்றைய சூழலில் ஈழத்தை நேரடியாக அடித்து பிடிக்க முடியாது. யூதர்கள் முதலில் ஒற்றுமையான மக்களாக உருவாகி, உலகிலே சாதனையாளர்களாக மாறி, பலம்பெற்ற  பின்னர்தான் நாடு அமைக்க முடிந்தது. நாம் எவ்வாறு ஒற்றுமையான சாதனைப்படைக்கும் சமூகமாக மாறுவது, நமது அடையாளத்தை மொழியை  எப்படி காப்பது, பிறப்பு விகிதத்தை எப்படி கூட்டுவது, நமது பூர்வீக நிலங்களை எப்படி பறிபோகாமால் பாதுகாப்பது என்று பல திசைகளில் செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. இச்செயற்பாடுகள்  ஒன்றை ஒன்று பலப்படுத்துவது. நாம் இவ்வாறு ஈழத்தை நோக்கி  எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் காய்களை நகர்த்தி, படிப்படியாக சிக்கலான அமைப்பாக வளர்ந்து,  சுற்றி வளைத்து வாய்ப்பு அமையும் பொழுதுதான்  வீழ்த்த முடியும். நாம் போகவேண்டிய பாதை படிப்படியாக புலிகளைப்போன்று  பரிணமிக்கும். அதை முன்கூட்டியே அறிய முடியாது, திட்டமிடவும்  முடியாது [3].
மனிதனின் பகுத்தறிவுதான் அவனை செயல்படுத்தும் காரணி என்று பொதுவாக பலரும் கருதுகின்றனர். ஆனால் இது பிழையான பார்வை. மனிதனின் பகுத்தறிவு அவனது உணர்வுகளுக்கு அடிமை என்று அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உணர்வுகள் இல்லாமல் மனிதனின் பகுத்தறிவுகூட வேலை செய்யாது [11]. புலிகளின் மனபலத்தில்  உலகில் நிகரற்ற படையை உருவாக்க முடிந்ததற்கு காரணம் உணர்வுகள்தான்.  மக்களிடம் அவ்வாறான உணர்வுகளை உருவாக்குவது முக்கியம். உணர்வுகள்  பெரும்பாலும் வளரும் வயதில் உருவாவதனால், அதற்கேற்றவாறு கல்வி பண்பாட்டு அமைப்புகளை  சீரமைப்பது முக்கியமானது. வளர்ந்து இருபது வயதிற்கு மேலான பின்பு  உணர்வுகளை உருவாக்குவது கடினமானது.
ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு சமூகமும் தனது எதிர்காலத்தை வரலாற்றின் சாயலிலேதான்  அமைக்க முற்படுகிறது. புலிகள் யாருக்கும் இல்லாத நிகரற்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். அவற்றை முழுவதுமாக ஆவணப்படுத்துவது அதிமுக்கியமானது. அதை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிப்பது அதைவிட முக்கியமானது. அதனால் அதற்கேற்ற பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டியது முக்கியம் பெறுகிறது. ஒவ்வொரு தமிழருக்கும் என்று புலிகளின் வரலாறு தெரிகிறதோ, என்று ஒவ்வொரு வீடும் மாவீரர் நாளில் வணக்கம் செலுத்துகிறதோ, அன்று தமிழின விடியல் வெகுதூரம் இருக்கப்போவதில்லை. இது எதிரிகளுக்கும் தெரியும். அதனால்தான் புலிகளின் வரலாற்றை மறைக்க முழு மூச்சில் செயல்படுகிறார்கள். அவர்களின் கல்லறைகளை இடித்தார்கள், போரில் அழியாத பதுங்கு கட்டிடங்களைத் வெடி வைத்து தகர்த்தார்கள், தலைவர்களின் உடல்களை மறைத்தார்கள்,   ஐயா நெடுமாறனின் நூலை எரிக்க நீதி மன்றம் உத்தரவிடுகிறது. புலிகள் பற்றிய திரைப் படங்களுக்கு தடை இடுகிறது. அவர்கள் அஞ்சுவது புலிகளின் வரலாறு என்ற மாபெரும் ஆயுதத்திற்குத்தான். புலிகளின் வரலாற்றை மறைக்காமல் அவர்களால்  தமிழரை அடிமைப்படுத்த முடியாது [1].
எதிரிகளின் ஆற்றலை உறிஞ்சி நாம் பலம்பெறுவது ஒரு முக்கிய உத்தியாக இருக்கவேண்டும். புலிகளின் பெரும்பாலான ஆயுதங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையே [5].
இறுதிப்போரை தோல்வி என்று எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ அல்லது யூதர்களின் மாசாதவோ தோல்வி என்று பதியப்படவில்லை. அவை மகத்தான வெற்றிகளாகவே பதியப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் காலம் முழுதும் எதிரொலித்து ஒரு இனத்தை காத்து இயக்கும் வல்லமை கொண்டது. அதனால் நந்திக்கடலின் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதை ஒரு மகத்தான வெற்றியாகவே பதியப்படவேண்டும். இந்த வெற்றி மனநிலையே நம்மை அடுத்த கட்டத்திற்கு நம்பிக்கையுடன் நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கும். எவ்வாறு கிரேக்கர்களும் யூதர்களும் மீண்டார்களோ, அதுபோன்ற மீட்சிக்கு வழிவகுக்கும். இவ்வுலகில் போரிட்டு அழிந்த இனங்களைவிட, போரிடாமல் அழிந்த இனங்கள்தான் மிக அதிகம். போர்தான் ஒரு தேசத்தின் ஆன்மாவையே உருவாக்குகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல்[3,12].
புலிகள் எவ்வாறு பலவெற்றிகளைப் பெற்றார்கள் என்று பலகாரணிகளை அடுக்கினேன்,  ஆனால் பிரபாகரன் அவர்களை  அவற்றில் உள்ளடக்கவில்லை. ஏனென்றால் இவற்றை உருவாக்கியதே அவர்தான்.  பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை இனி  எவ்வளவு காலமானாலும் கிடைக்கப்போவதில்லை.  பிரபாகரன் போன்ற தலைமையை எப்படி உருவாக்குவது என்பதை எந்த அறிவியல் தத்துவத்தாலும் கூற முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை Blackswan என்கிறார் நசீம் தலீபு [13]. பிரபாகரன் அவர்கள் சித்தாந்தம், பண்பாடு, சட்டம், ராணுவ தந்திரங்கள், படைத்தலைமை, நாட்டின் தலைமைப்பொறுப்பு, உலக அரசியல் எனப் பலதுறைகளை கட்டி ஆண்ட ஆளுமை. மற்ற பெரும் தலைவர்கள் ஏதாவது ஒன்றையாவது வெளியிலிருந்து கடன் வாங்கி இருப்பார்கள். உதாரணமாக லெனின், மாவோ ஆகியோர் மார்க்சிடம் இருந்து சித்தாந்தத்தை, பண்பாட்டை கடன் வாங்கினர். நான் அறிந்தவரையில் பிரபாகரனைப் போல இவ்வாறு அனைத்திலும் ஆளுமை செலுத்தியவர் இருவரே. ஒருவர்  சுபார்ட்டாவின் இலைக்கர்கசு[14], இன்னொருவர் முகம்மது நபிகள்.

பிரபாகரன் போன்ற தலைமை நமக்கு இனி கிடைக்கப்போவதில்லை, ஆனால் நாம்  மனம்  தளரத்தேவையில்லை. நபிகளின் காலத்தில் அரேபியா பொற்காலம் காணவில்லை, மாறாக அவரின் மறைவிற்குப்பின் வந்த தலைமைகளை பொற்காலம் படைத்தனர். சுபார்ட்டவும் அவ்வாறே.  நபிகள் போன்ற  தலைமைகள் என்ன செய்கிறார்கள் என்றால், நாட்டிற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து போகவேண்டிய பாதையையும், வழிமுறைகளையும் உருவாக்கிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பின்வரும் தலைமைகள்  அதை பின்பற்றி பெரும் வெற்றிகளைப் பெறுகிறார்கள். இவ்வாறுதான் நாம் பிரபாகரனைப் பார்க்கவேண்டும். பொதுவாக இதுபோன்ற மாபெரும் ஆளுமைகளைப் பற்றி கூறப்படுவது என்னவென்றால் “அவர்கள் சரியான நேரத்தில் தோன்றுவார்கள், சரியான நேரத்தில் மறைவார்கள்”. நாம் பெரிதாக கலங்கத் தேவையில்லை. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ,  அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரன் படைத்துவிட்டார். இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.  பிரபாகரனின் பாதை  என்பது மதங்களைப்போல குருட்டுத்தனமாக  பின்பற்றுவது கிடையாது. பகுத்தறிந்த செயல்பாடுகளையும் நம்பிக்கையையும்  கலந்த பாதை.

இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை  சுருக்கமாகக் கூறினால் “நமது சூழலுக்கேற்ற சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பவேண்டும்”. நாம் பார்த்த அனைத்து உத்திகளும் அடிப்படையில் இதை நோக்கியதே. நாம் எதிரியைத் தோற்கடிக்க அவர்களைவிட சிக்கலான அமைப்பாக நாம் இருக்கவேண்டும். இதைப் பயன்படுத்திதான் புலிகள் வெற்றி கொண்டார்கள், நாம் பயணிக்கவேண்டிய பாதையும் இதுதான். புலிகள் இவ்வுத்திகளை இராணுவ அமைப்பிற்கு பயன்படுத்தினார்கள், நாம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தவேண்டும். புலிகள் வகுத்த பாதையைக் கொண்டு நாம்  இழந்ததை மட்டும் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, சமூகத்தை மறுசீரமைத்து, சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பி, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம். அதற்கான வலிமை புலிகளின் வரலாற்றிற்கு உண்டு. அவ்வரலாறுதான்  புலிகள் நமக்கு விட்டுச்சென்ற மாபெரும் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.