பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!!

அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டு 2019.09.01 ஆம் திகதிக்கு 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான சுற்றுநிரூபத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச நிர்வாக 25/2014 மற்றும் 25/2014/01 ஆகிய சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போனதன் காரணமாக நிரந்தர நியமனத்தைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களுக்கு குறித்த நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுநிரூபம் வெளியிடப்பட்ட பின்னர் சேவையின் தேவையின் அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்ப தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிக, நாள் சம்பளம், ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன, நிவாரண அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, இணைத்துக்கொள்ளப்பட்டு 2019.09.01 தினத்தன்று 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்கள் உரிய தகுதிகளை பூர்த்தி செய்யும் நிலையில் அவர்களை நிரந்தரமாக்கி, ஓய்வூதியத்துடன் நியமனம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.