கோட்டா மீதான எவன்காட் வழக்கு ஒத்திவைப்பு!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், எவன்கார்ட் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவன்கார்ட் வழக்கு குறித்த விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
ஆனாலும் அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதனால் குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை