யாழ் பல்கலைக்கழக வறிய மாணவர்களுக்கு உதவி!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு காந்தள் புலம்பெயர் இளைளோரின் நிதிப்பங்களிப்பில் தாங்கும் கரங்கள் அமைப்பினூடாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


யாழ் பல்கலைக்கழகத்தில் வறுமையின் மத்தியில் கல்விகற்று வருகின்ற பல மாணவிகள் தமது வீட்டு வாடகையினை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகத்திலிருந்து சற்று தூரமாகவே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து படித்து வருவதை அவதானிக்கின்றோம்.

பல மைல் தூரத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு மாணவிகள் பலர் நடந்து வருவதைவதையும் சில நேரங்களில் காலைநேர விரிவுரை மாலைநேர விரிவுரை என ஒர் நாளில் இரு முறை விரிவுரைகள் இடம்பெறுகின்ற போது வீட்டிற்கும் பல்கலைக்கழகத்திற்குமென கால்நடையாகவே நடந்து செல்கின்றனர்.

இவர்களின் துயர் போக்கும் முகமாக பல்கலைக்கழகத்தை தளமாக கொண்டு இயங்கும் தாங்கும் கரங்கள் அமைப்பு  காந்தள் புலம்பெயர் இளையோரிடம் விடுத்த அன்புக்கோரிக்கையின் அடிப்படையில் காந்தள் புலம்பெயர் இளையோரின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து 11 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்   பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் திவாகரன் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் கிரிசாந் மற்றும் தாங்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் நிருபன் மற்றும் உறுப்பினர் கிருபா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.