பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கேணல் பருதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் திரு உருவப்படங்களிற்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரர் அவர்களும் மாவீரர் கேணல் செல்வாவின் சகோதரர் அவர்களும் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றன.
போட்டி முடிவுகள் வருமாறு:–
துடுப்பெடுத்தாட்டம்:
முதலாம் இடம்: எழிச்சி விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம் AU
மூன்றாம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம் A
சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஜெகன் (எழிச்சி)
சிறந்த பந்து வீச்சாளர் : துசி (எழிச்சி)
சிறந்த தொடராட்ட வீரன் : துசி (எழிச்சி)
இறுதியாட்ட நாயகன் : ஜெகன் (எழிச்சி)
உதைபந்தாட்டம்:
13 வயதின்கீழ்
முதலாம் இடம்: ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரர்கள்: ஆகாஷ் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்) கோபிசன்; (தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
இறுதியாட்ட நாயகன்: டிலக்சன் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்)
15 வயதின்கீழ்
முதலாம் இடம்: ரோமியோ நவம்பர் விளையாட்டுக்கழகம்
இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரர்: இந்துஜன் (தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
இறுதியாட்ட நாயகன்: அனோஜ் (ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம்)
வளர்ந்தோர்
முதலாம் இடம்: சென் பற்றிக்ஸ் விளையாட்டுக்கழகம்
இரண்டாம் இடம்: நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்
மூன்றாம் இடம்: வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம்
சிறந்த விளையாட்டு வீரர்கள்: பெனி (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்) ஜோன்: (சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் 93)
இறுதியாட்ட நாயகன்: சால்ஸ், தோமா (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.