எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி!

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரை அண்டிய பகுதிகள், பேருந்து நிலையங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் அத்துடன் செட்டிகுளம் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இப் பிரச்சார நடவடிக்கை தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்மக்கள் கூட்டணி ஆகியவற்றி வவுனியா மாவட்ட பிரதிநிதிகளால் இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 3.30மணி வரையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.