நுளம்புகளை ஒழிக்க புதிய நடைமுறை!!

டெங்கு நுளம்புகளை ஒழிக்க புதிய வகை பிரேசில் நுளம்புகளை  வளர்த்து பரப்ப ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


அந்தவகையில், டெங்கு வைரஸை ஒழிக்கும் பக்டீரியாவை பிரேசிலைச் சேர்ந்த ஒரு வகை நுளம்புகளில் செலுத்தியுள்ளனர்.

பக்டீரியா செலுத்தப்பட்ட பிரேசில் நுளம்புகள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ ஆய்வகம் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

டெங்கு வைரஸை உலகம் முழுவதிலிமிருந்து அகற்ற பக்டீரியா செலுத்தப்பட்ட நுளம்புகள் களம் இறங்கவுள்ளன.

Wolbachia என்னும் பக்டீரியாவை வளர்த்துவிட்டு ஏடிஸ் நுளம்புகளில் காணப்படும் டெங்கு வைரஸை ஒழிக்கும் முயற்சி நடைபெற்றுவருகின்றது.

இந்த பக்டீரியாக்கள் மூலம் ஜிகா வைரஸ் மற்றும் சிக்கன்குன்னியா வைரஸ்களைக் கூட ஒழிக்க முடியும்.

பிரேசிலில் டெங்கு பாதிப்புக்குள்ள இடங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதலே  Wolbachia பக்டீரியா செலுத்தப்பட்ட நுளம்புகளை ஆய்வாளர்கள் பரப்பி வருகின்றனர்.

எனினும் தொடர்ந்து செய்வதன் மூலம்  Wolbachia பபக்டீரியா உடனான நுளம்புகள் பெருகும் எனக் கூறப்படுகின்றது.

Wolbachia பக்டீரியா ஒரு நுளம்புகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் டெங்கு வைரஸ் நுளம்புளைத் தாக்குவது குறைவாகும். அவை தாக்கினாலும், Wolbachia பக்டீரியா அந்த வைரஸை ஒரு நுளம்புகளின் உடம்பிலிருந்து பெருக விடாமல் தடுக்கும் என்பதே இதன் நோக்கமாகும்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.