ஹெரோயின் கடத்தல்காரருக்கு மரண தண்டனை!
43.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய மற்றும் வைத்திருந்தமை தொடர்பாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
43 வயதுடைய 05 பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் முஸாகிர் கடாபி என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சுமார் 43.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாகந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இச்சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக 03 வருடங்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை