போடைஸ் மக்களின் போராட்டம் தொடர்கிறது!!!

டிக்கோயா, போடைஸ் 30 ஏக்கர் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று (09) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
இன்றைய போராட்டம் சாலைமறியல் போராட்டமாக மாறியிருந்து. தீர்வு கிடைக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாகக்கூட அது மாறலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

2018 டிசம்பர் 29 ஆம் திகதி மின் கோளாறு காரணமாக ஏற்பட்ட வீதிபத்தில் 24 வீடுகள் முற்றாக தீக்கிரையான. இதனையடுத்து மக்கள் தற்காலிக கொட்டில்களில் குடியமர்த்தப்பட்டனர்.
எனினும், இவர்களுக்கான வீடுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக வீடுகளை அமைத்து தருமாறு கோரியுமே நேற்று முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்
Powered by Blogger.