அரசியல் சூட்சுமத்தில் ஒன்றுதான் தேர்தல் புறக்கணிப்பு!!

சிறிலங்காவிற்கான சனாதிபதி தேர்தல் சிறிலங்காவில் சூடு பிடித்திருக்க இந்த தேர்தலில் தமிழ்மக்களுடைய பங்களிப்பு எதுவாக இருக்க வேண்டும் என்கின்ற பாரிய குழப்ப நிலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு புறம் புறக்கணிப்பு இன்னொரு புறம் சஐித் ஆதரவு இன்னொரு மிகச்சிறிய கூட்டம் கோத்தபாய ஆதரவு என தமிழர்கள் பிரிவடைந்திருக்க இந்த தேர்தல் எதை தீர்மானிக்க போகின்றது என்கின்ற  தெளிவு தமிழ்மக்களிடையே இல்லை என்பதே உண்மை.

குறிப்பாக இம்முறை தேர்வு செய்யப்படும் இரு வேட்பாளர்களுமே தமிழர்களை பொறுத்தமட்டில் ஒரே மாதிரி ஆனவர்களே கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசியல் வாதிகாளல் ஏமாற்றப்பட்டு வரும் தமிழர்கள் இந்த தேர்தலில் வாக்களித்து எதை சாதித்துவிட முடியும் என்பதே மிகப்பெரும் கேள்வி.


கோத்தபாய ஆபத்தானவர் சஐித் ஆபத்து குறைந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை காரணம் இலங்கை மீதிருக்கின்ற சர்வதேச அழுத்தத்தை சரிசெய்ய இருவரும் ஒருவாறே நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இருவருக்குமே இருக்கின்றது.



ஆனால் புறக்கணிப்பு என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இலங்கையின் இறைமையை மறுக்கிறார்கள் என்பதையும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்கின்ற செய்தியையும் நாம் கணதியாக சொல்லிவிட முடியும்.

எம்மை அழித்தது சர்வதேசமும் இணைந்து தானே என்கின்ற பெரும் கேள்வி இருந்தாலும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச நீரோட்டத்துடன் சேர்ந்தே ஓட வேண்டிய பெரும் தேவை தமிழ்மக்களுக்கு இருக்கின்றது என்பதே உண்மை.

 APRIL 18, 2019-மேற்கு பப்புவாவிற்கான விடுதலை அமைப்பு இந்தோனேசிய தேர்தலை புறக்கணித்து வெற்றியும் கண்டது.

Apr 26, 2012-அல்சீரிய தேர்தல் புறக்கணிப்பு அல்சீரியாவின் கொடுங்கோல் ஆட்சியை உலகுக்கு சொன்னது.

APRIL 5, 2019-இஸ்ரேலிய தேர்தணை இஸ்ரேலிய சிறுபான்மை அரேபியர்கள் புறக்கணித்தனர்.

SEPTEMBER 17, 2019-வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக சிவப்பு எச்சரி்க்கை துண்டுகளை இட்டு பலஸ்தீன காசாபகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்திருந்தனர்

காஸ்மீரிய மக்கள் காலம் காலமாக இந்தியா தேர்தலை புறக்கணித்து வருகிறார்கள்.

2000ம் ஆண்டு மொன்டநிக்கிரோ யுக்கசோல்வியா தேர்தலை புறக்கணித்தார்கள் 21 மே 2006 விடுதலை அடைந்து தனிநாடனாது.

தேர்தல் புறக்கணிப்பென்பதே ஒரு அரசியல் போராட்டம் தான் என்பதை இந்த மக்கள் எப்போது உணர்வார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.