ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள் தேசிய அணியில்!!

அகில இலங்கை தேசிய மட்ட 12 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உதைபந்தாட்ட அணிகளில் யாழ்.இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்களான பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன், பாக்கியநாதன் றெக்சன், மரியநேசன் பிரசாந்த் மற்றும் சதுர்சன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


ஸ்பெயினின் ‘பார்சிலோனா’ கழகத்தில் இடம்பெற்ற மைலோ நிறுவனத்தின் 12 வயதிற்குட்பட்ட உலக மைலோ தொடருக்காக பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன் இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதில் தெரிவு செய்யப்பட்ட 6 வீரர்களில் வடக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் வீரர் இவராவார்.

அதேவேளை பாக்கியநாதன் றெக்சன் மற்றும் மரியநேசன் பிரசாந் ஆகியோர் 19 வயதிற்குட்பட்ட தெற்காசிய உதைபந்தாட்ட தொடர், ஆசிய தகுதிகாண் தொடர் மற்றும் ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான தொடர் என்பவற்றுக்காக இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மூன்று வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

அதில் அவர்கள் இருவரும் நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19 வயதிற்குட்பட்ட தொடரிலும் மலேசியா சென்றிருந்த அணியிலும் இடம்பெற்றிருந்ததுடன் கட்டாரில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்குட்பட்ட ஆசிய தகுதிகாண் போட்டிகளிலும் பக்குபற்றியிருந்தனர்.

இதில் முதலில் ஆடும் பதினொருவர் அணியிலும் இவ்விரு வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

மேலும் 47வது ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சம்பியன்சிப் போட்டிக்காக இந்தோனேசியா செல்லும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் மு.சதுர்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வருடம் இடம்பெற்ற தேசிய அளவிலான 19 வயது தேசிய அணி வீரர்களின் எண்ணிக்கையில் கொழும்பு சாகிரா கல்லூரிக்கு அடுத்தபடியாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளமை சிறப்பாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.