விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஷ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.


விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல. சமஷ்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் இது சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிஸர்லாந்தின் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260 வது சரத்தை மீறி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேரில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது குற்றவியல் அமைப்பு ஒன்றுக்கு உதவும் நடவடிக்கை என கூறப்பட்டிருந்தது.

சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தேக நபர்களை விடுதலை செய்ததுடன் இன்று வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

சமஷ்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான சட்டம் மாபியா போன்ற திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்.

இந்த சட்டம் அல் – கைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கையாளப்பட்டது.

குறித்த குற்றம் நிகழ்ந்த போது விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பாக கருதப்படவில்லை என சமஷ்டி நீதிமன்றம் கூறியுள்ளது.

அந்த அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருந்தாலும் தனியான ஆட்சி அதிகாரத்தை பெறுவது தமது சமூகத்தை சுயாதீனமான சமூகமாக அங்கீகரிக்க கோரியே அந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை நடத்தியது.

சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய அன்று விடுதலைப் புலிகளுக்காக சுவிஸர்லாந்தில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் சட்ட மீறியதாக கருத முடியாது. ஒரு குற்றவாளி சட்ட ரீதியான அடிப்படைகளை மீறியுள்ளார்.

சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் சந்தேக நபர்களில் 5 பேருக்கு எதிராக வர்த்தக ரீதியான மோசடி மற்றும் இருவருக்கு எதிராக போலி ஆவணங்களை தயார் செய்தமை தொடர்பாக சிறைத்தண்டனை விதித்திருந்தது. 11 முதல் 24 மாதங்கள் வரை இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் சமஷ்டி நீதிமன்றம் சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஒரு முறைப்பாட்டை அனுமதித்துள்ளது.

சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் விடுதலை செய்த ஒரு தரப்பினர் போலி ஆவணங்களை தயார் செய்தனரா என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

சந்தேக நபர்களின் மேன்முறையீட்டையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் உண்மையில் மோசடி நடந்துள்ளதா என்பது குறித்து சமஷ்டி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டியுள்ளது.

சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர ஒன்பது வருடங்கள் ஆனது. இதற்காக நான்கு மில்லியன் பிராங் செலவாகியுள்ளது.

வழக்கின் செலவில் 55 ஆயிரம் பிராங்குகளை சந்தேக நபர்கள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.