நேபாளம் -பதக்கப் பட்டியலில் முதலிடம்!

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபளத்தின் காத்மண்டு நகரில் நடைபெற்று வருகின்றது.


நேபாளத்தில் நிலவும் கடும் குளிரானது ஏனைய நாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய சவலாக அமைந்துள்ளது. இந்த குளிரை சாதகமாக்கிக் கொண்டுள்ள நேபாள வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

அதன்படி 19 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 33 பதக்கங்களை இதுவரையில் அள்ளியள்ளது நோபளம். இந்தியா இரண்டாமிடத்திலும் இலங்கை மூன்றாமிடத்திலும் உள்ளது.

தடகளத்தில் முதல் தங்கத்தை வென்றெடுத்தார் நிலானி

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளத்தில் இலங்கைக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தார் மாற்று வீராங்கனையான களமிறங்கிய நிலானி ரத்நாயக்க.

1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய வீராங்கனையான நிமாலி லியனாராச்சி விபத்தில் சிக்கி போட்டியில் இருந்த விலகிய நிலையில், அவருக்கு பதிலாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிக்காக களமிறக்கப்பட்டார் நிலானி ரத்நாயக்க, இவர் பந்தயத் தூரத்தை 4 நிமிடம் 34 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் தவறியது

நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைப்பெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மிற்றர் ஓட்டப் போட்டியில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று தெற்காசிய சாதனை நிலைநாட்டிய இலங்கை வீரர் ஹிமேச எஸான இம்முறை இரண்டாமிடத்தைப் பெற்று ஏமாற்றினார்.

அதேபோல் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை தங்கத்தை தவறவிட்டனர்.

ஆனாலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கைள இலங்கை வென்றெடுத்தது.
சண்முகேஷ்வரனின் தங்க எதிர்பார்ப்பு

ஆண்களுக்கான 10000 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகள் நாளை காலை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை சார்பாக மலையக வெற்றி வீரரான சண்முகேஷ்வரன் கலந்துகொள்கின்றார்.

நாளைய போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து சண்முகேஷ்வரனிடம் வினவியபோது, சிறந்த முறையில் பயிற்சிகளை பெற்று வருகிறேன். தங்கப் பதக்கம் தான் என்னுடை ஒரே குறி. ஆனாலும் இங்கு நிலவும் குளிரான காலநிலையும் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

அதேவேளை இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10000 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலந்தி லங்கா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவர் பந்தயத் தூரத்தை 35.59.02செக்கன்களில் ஓடி முடித்தார். இதில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவும், தங்கப் பதக்கத்தை நோபளமும் வென்றது.


உயரம் பாய்தலில் வெள்ளி

உயரம் பாய்தல் போட்டியில் ஆண்கள் அணி ஏமாற்றமடைய பெண்கள் பிரிவில் போட்டியிட்ட துலாஞ்சனி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார்.

இவர் 1.69 மிற்றர் உயரம் தாண்டியே இந்த பதக்கத்தை வென்றார். இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய பதக்கங்களை இந்தியா வென்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.