இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்


நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் தீவிரமடைந்துள்ளதால், இன்றைய தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்று வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றினை இட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோயும் பாதுகாக்கவும்!
261 people are talking about this
Powered by Blogger.