மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை


அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது. கொழும்பில் உள்ள இந்திய பிரிதி உயரிஸ்தானிகரினால் வெளிவிவகார அமைச்சர் மற்றும் சுகாரதத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் குறித்த மருத்துவ பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2020 மே 08 ஆம் திகதி சிறப்பு இந்திய விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 12.5 டொன் எடையுள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளடங்கிய இந்தப் பொருட்களின் தொகுதியானது, கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடும் அண்டை மற்றும் பங்காண்மை நாடுகளுக்கு உதவுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியைக் குறித்து நிற்கின்றது. தேசிய ரீதியாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையிலும், இலங்கைப் பிரஜைகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்புவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகளுக்காக அமைச்சர் குணவர்தன இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
Powered by Blogger.