நால்வர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு சென்றனர்!!

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதணைகளின் பின்னர் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று காலை வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை கூறினார்.
கடந்த முதலாம் திகதி அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதணையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டநிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிஸ் போதகர் சற்குணம் அரியாலையில் நடத்திய மத ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 16 பேர் கொரோனா தொற்றிற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.