மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!!

பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட அதன் பட்டியலிலிருந்து இலங்கையினை ஐரோப்பிய ஆணைக்குழு நீக்கியுள்ளது.

2017 ஒக்டோபர் மாதத்தில் சாம்பல் நிறப்பட்டியல் என பொதுவாக இனங்காணப்படுகின்ற நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் இணங்குவித்தல் ஆவணத்தில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நியாயாதிக்க பிரதேசமாக அச் செயலணி மூலம் இலங்கை அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து 2018 பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடொன்றாக அட்டவணைப்படுத்தப்பட்டது
அட்டவணைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இனங்காணப்பட்ட உபாய ரீதியான குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கைக்கென காலம் வரையறை செய்யப்பட்ட நடவடிக்கைத் திட்டமொன்று குறித்தொதுக்கப்பட்டிருந்தது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் அட்டவணைப்படுத்தப்பட்டதிலிருந்து நிதியியல் உளவறிதல் பிரிவானது ஏனைய ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து வழங்கப்பட்ட காலச் சட்டகத்தினுள் நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் நடவடிக்கைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு செயல்திறன்மிக்கதும் உறுதியானதுமான தொடரான நடவடிக்கைகளை எடுத்திருந்ததுடன் அதற்கமைய நிதியியல் நடவடிக்கைச் செயலணியானது 2019 ஒக்டோபர் 13 – 18 வரை பாரிஸ் நகரில் நடைபெற்ற அதன் முழுநிறைவான அமர்வில் அதன் இணங்குவித்தல் அட்டவணையிலிருந்து சாம்பல் நிறப்பட்டியல் எனவும் அறியப்படுகின்ற இலங்கையினை நீக்கியது.
பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைக்கான நடவடிக்கைத் திட்டத்துடன் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் இடர்நேர்வுமிக்க மூன்றாம் நிலை நாடுகளின் திருத்தப்பட்ட அட்டவணையானது அங்கீகாரத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய சபைக்கும் பாராளுமன்றத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டமை முன்னைய இரண்டு வருட காலப்பகுதியின் போது நிலவிய பாதகமான விளைவுகளை இல்லாதொழிக்குமென்றும் நாட்டின் சாதகமான பொருளாதாரத் தோற்றப்பாட்டினையும் நிதியியல் உறுதிப்பாட்டினையும் மேலும் வலுப்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.