விற்பனைக்கு பயன்படும் முச்சக்கரவண்டிகளுக்கான விசேட பரிசோதனை!!

வவுனியாவில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் முச்சக்கரவண்டிகளுக்கான விசேட பரிசோதனை நடவடிக்கை இன்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக வவுனியா சுகாதார பிரிவுனர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளரின் வழிநடத்தலின் பிரகாரம் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக முச்சக்கரவண்டிகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடத்தப்பட்டது.
இதன் போது பேக்கரி பொருட்களை கொண்டு செல்லும் முச்சக்கரவண்டிகளின் தரம், பொருட்களை நுகர்வோருக்கு வழங்கும் முறை, கையுறைகளின் தன்மை என்பனவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.