சிசுவை மண்ணில் புதைத்த தாய் கைது!!

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஜனபதய கொலனி பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.


119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சிசுவை வீட்டிற்கு அருகாமையில்உள்ள மானா தோப்பு பகுதியில் குழிதோண்டி புதைத்ததை ஏற்றுக் கொண்டு குறித்த பகுதியினை அடையாளம் காட்டியுள்ளார்

இதனையடுத்து ஹட்டன் தடயவியல் பொலிஸார் ஹட்டன் நீதிமன்றதில் நீதவான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் கே.ராமமூர்த்தி தலைமையில் சிசு புதைக்கப்பட்ட பகுதியில் இருந்து சிசு தோண்டி எடுக்கப்பட்டது.

26 வயதான அந்த பெண்ணின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், வீட்டில் இந்த பெண்ணும் தந்தையும் மாத்திரம் இருந்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையுள்ள நேற்று மற்றுமொரு சிசுவை பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் தந்தையாரும் இந்த சிசுக் கொலை சம்பவத்தில் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குழந்தையை பிரசவித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.