ஆரம்பமானது வாக்காளர் அட்டை விநியோகம்!!
இன்று முதல் 2020 பொதுத்தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளர்.
குறித்த நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வாக்களர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகில் உள்ள தபாலகங்களில் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 14 , 15 , 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
அரச பணியாளர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் குறித்த நாட்களில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத அரச பணியாளர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆகிய வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo