மனிதன் இயற்கையின் எதிரி

தரையைவிடவும் கடலுக்குள்ளேயே பலநூறு மடங்கு பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்பி வைக்கிறோம்.


கடலில் அதிகம் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும், கைவிடப்பட்ட தங்கூசி வலைகளில் சிக்குண்டும் மரணிக்கும் கடல்வாழ் உயிரினங்களில் ஆமைகளே அதிகம் இடம் பிடிக்கின்றன.


காட்டில் யானைகள்போல் கடலில் ஆமைகள் மிகப் பிரதானமானவை. தேவையானவை.


நாம் எப்போதான் உணரப் போகிறோம் நமது அடுத்தடுத்த சந்ததியின் எதிர்காலத்தை.


நாங்கள் நஞ்சை விதைப்பது தரையிலும், கடலிலும் அல்ல. அடுத்த தலைமுறையின் வாய்க்குள் நேரடியாகவே ஊற்றுகிறோம்.


மனிதசமூகம் சமுத்திரங்களைக் கடக்கவும், நாடுகளைக் கண்டடையவும் நடுக்கடலில் வழிகாட்டியாக, திசையறி கருவியாக விளங்கிய உயிரிகள் கடலாமைகள்தான்.


நூறு வயது தாண்டியும் வாழவல்லவை. ஆனால் இன்று அவை இனப்பெருக்கம் செய்ய முடியாதபடி கரைகளை அபகரித்து விட்டோம்.


அவை கடலிலும் உயிர் வாழ முடியாதபடி பிளாஸ்டிக் நஞ்சுகளை அள்ளிக் கொட்டி கடலை நிறைக்கிறோம்.


பிளாஸ்டிக்கைத் தயாரிக்கும் முதலாளியம் இதுபற்றிக் கரிசனை கொள்ளா.

அது தனது கொள்ளை இலாபங்களுக்காக நஞ்சுகளைத் தயாரித்துக் கொண்டேதான் இருக்கும்.


நாம் ஒவ்வொரு தனிதனி மனிதரும் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே எமது அடுத்தடுத்த மனித சந்ததியைக் காப்பாற்ற முடியும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.