இலங்கையின் ஜனநாயக தேர்தல் ஆரம்பம்!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(புதன்கிழமை)  காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

166 தொகுதிகளில் இருந்து 196 பேரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை மொத்தமாக வாக்களிக்க ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்தலில் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை அவதானிக்கும் போது கொழும்பு 19, கம்பஹா 18, களுத்துறை 10, கண்டி 12, மாத்தளை 5, நுரவெலியா 8, காலி 9, மாத்தறை 7,

அம்பாந்தோட்டை 7, யாழ்ப்பாணம் 7, வன்னி 6, மட்டக்களப்பு 5, திகாமடுல்லை 7, திருகோணமலை 4, குருணாகல் 15, புத்தளம் 8, அநுராதபுரம் 9, பொலன்னறுவை 5, பதுளை 9, மொனராகலை 6,

இரத்தினபுரி 11, கேகாலை 9 என்ற அடிப்படையில் 196 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.