விடத்தல்தீவு இறால் பண்ணையால் ஏற்பட்டு கொண்டிருக்கும் பாதிப்புக்கள்📷


1600 ஏக்கர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் அளிக்கப்பட்டு விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியிலும் செயற்கை இறால் வளர்ப்பு பண்ணை செயற்படுத்தப்பட்டு வருகின்றது.


பெருமளவில் அமைக்கப்படும் இறால் பண்ணைகளுக்காகக் கடற்கரைக்கு அருகில் உள்ள நிலங்கள் சூறையாடப்பட்டு   பச்சைவீட்டு வாயுவான  கார்பன் டை ஒக்சட்(CO2) வாயுவை கூடியளவு அகத்துறிஞ்ச கூடிய கண்டல் தாவரங்கள் அளிக்கப்படுகின்றன. இதனால் புவி வெப்பமடைவதற்கு காரணமாவதுடன் நிலம் திறந்த  வெளியாவதால் கடலரிப்பு மற்றும் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.


இறால் வளர்க்கும் பொது கடல் நீரானது உள்ளெடுக்கப்படுகின்றது. அதன் பொது இறால்கள்  மட்டும் வளரவேண்டும் என்ற நோக்கில் மீன்முட்டைகள் அனைத்தும் அளிக்கப்பட்டே எடுக்கப்படுகின்றன. இதனால் மீன்களின் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது.


இறால் பண்ணைகளில் உவர் நீர் தேக்கம் காரணமாக சுற்று வட்டத்தில் நன்நீர் உப்பாவதுடன் அருகில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பாதிப்படையும்.

முக்கியமாக இறால்கள் பெருப்பதற்காகவும் நோயெதிர்ப்புக்காகவும் பாவிக்கப்படும் மருந்துகள் மற்றும் ரசாயன பொருட்கள் உயிர்பல்வகைமையை பாதிப்பதுடன் மனிதனையும் பாதிக்கின்றது. 


இறால் வளர்ந்த பிறகு புதிய இறால் வளர்ப்புக்காக பாவிக்கப்பட்ட ரசாயனங்கள் கலந்த நீரானது நேரடியாக கடலுக்குள் அனுப்பப்படுகின்றது. ஆழமற்ற கடலில் சூரியஒளி இலகுவில் பரவுவதால் அங்கு கடற்தாவரங்கள் நன்றாக வளரும். இவை கடல் உயிரினங்களுக்கு உணவாகவும், உறைவிடமாகவும் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த இடமாகவும் இருக்கின்றன. இவ் இரசாயனம் கலந்த நீரினால் கடற்படுக்கை தாவரங்கள் அழியும், தாவரங்கள் அழிந்தால் கடல் உயிர்கள் அழியும். மீனவன் அழிவான்.


மேலும், கடல் நுண்ணுயிரிகள் அனைத்தும் இந்த இரசாயன அபாயங்களுக்கு ஆளாக நேரிடும். நுண்ணுயிரிகள் பல்வேறு உணவுச் சங்கிலிகளின் தொடக்கமாகவும் செயல்படுகின்றன. இதனால்   உணவு சங்கிலியில் உள்ள நுண்ணுயிரிகள் தொடக்கம் மனிதன் வரை ரசாயன தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

 

கடல் மலட்டுத்தன்மையும், நிலம் நச்சுத்தன்மையும் அடைவதால் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லாமல் மாறிவிடும். மீனவர்களுக்கான வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும்.  இதற்கு சரியான உதாரணம், சிலாவத்திற்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட உடப்பு பிரதேசத்தில் செய்யப்பட்ட இறால்பண்ணைகளால் இன்று அந்த இடம் எதற்கும் பயன்பட முடியாத சூனியப்பிரதேசமாக உள்ளது. 


கடலில் மீன்கள், இறால், நண்டு, கடலட்டை போன்றவற்றை இயற்க்கையாக வளரவைக்க பல வழிமுறைகள் உண்டு. இந்த பண்ணைகளை விட அதிகளவான விளைச்சலை கடலில் இருந்து பெற முடியும். இந்த செயற்கை பண்ணைகளால் ஒன்றிரண்டு பேர் வளங்களை சூறையாடி பயனடைய ஒரு சமூக சூழலே முற்றாக அளிக்கப்படுகின்றது.


சிந்திப்பதும் செயற்படுவதும் எங்கள் கைகளிலேயே உள்ளது.


ராகுலன் உதயநாயகி கந்தசாமி
Powered by Blogger.