திலீபன் கொலைகளில் ஈடுபட்டவன்! இந்த கொலைகாரர்களை எதற்கு நினைவுகூர வேண்டும்? விசர்தனமாய் உளறும் டக்ளஸ்

 


திலீபன் கொலைகளில் ஈடுபட்டவன். அவனிற்கு தியாகிப் பட்டம் வேறு கொடுக்க வேண்டுமா? இந்த கொலைகாரர்களை எதற்கு நினைவுகூர வேண்டும் என திருவாய் மலர்ந்து, ராஜபக்ச அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு வெள்ளையடிக்க முயன்றிருக்கிறார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யார் இந்த திலீபன்? இவன் சாதித்தது என்ன? தமிழ் மக்களிற்கு இவன் எவற்றை கொடுத்து விட்டான்? அரசியலுக்காக இவர்களை எல்லாம் தியாகிகள் ஆக்கிக் கொள்ள பார்க்கிறார்கள். திலீபன் ஏன் கொல்லப்பட்டான், அவனது சுயரூபம் என்ன, எத்தனை பேரை அவன் கொன்றான், ஏனைய அமைப்புக்களை சேர்ந்த எத்தனை பேரை அவன் கொன்றான் என்பதையெல்லாம் தெரியாமல் பேசக்கூடாது.

சகோதர படுகொலைகளில் ஈடுபட்டவன். இலங்கை அரசாங்கம் கொன்று குவித்ததை விட, இவர்கள் செய்த கொலைகள் ஏராளம். இவ்வாறான நபர்களை எதற்காக நினைவுகூர வேண்டும்? இதில் அவருக்கு தியாகிப்பட்டம் வேறு.

நடந்து முடிந்த விடயங்களை விடுவோம். புலிகள் யாரும் தியாகம் செய்யவில்லை. கந்தன் கருணையில் கொல்லப்பட்ட தமிழர்களுடன் திலீபனிற்கு தொடர்பில்லையா? இந்த கொலைகளின் பின்னணியில் இருந்தவர்களிற்கு தியாகி பட்டம் தேவையா?

Blogger இயக்குவது.